பயணிகள் கவனிக்க…

‘ஆண்டவன் கட்டளை’ ஆயிரம் ஆயிரம்;

ஆண்ட இவன் கட்டளைக்கு பாடனும் பாயிரம்  !

 

பாண்டவர் ஆண்டனர் பாரத பூமியை;

மாண்டவர் ஆயினர் சாரதி சாமியும்.

தாண்டவம் ஆடினர்; சிலர் தமிழையே சாடினர்

திராவிடம் பேசியே தீமையை பாடினர்.

இவரோ…..

எடுத்ததெல்லாம் எளிமை;

கொடுத்ததெல்லாம் தலைமை;

யாவருக்கும் கடமை-

அதை ஆற்றிடச் சொன்னதில் முழுமை.

குவளை தொடங்கி குவளயம் முழுமைக்கும்

தமிழர் பேரை தனியே செதுக்கி,

குறளுக்கு மணிமாடம், குறள் தந்தவருக்கு தனி இடம்,

நெஞ்சுக்கு நீதி,

நெஞ்சில் இருப்பவர்க்கு சமூக நீதி,

நெஞ்சில் குத்தியவர்க்கு மீதி,

பகைவனுக்கும் அருளி

பகை தகர்த்த பொருள் நீ,

‘குடும்பம், சமூகம், காத்து

பின்னர் என்னை அடை’ என்ற

கிருஷ்ண பரமாத்மாவின் கீதைவரிகள் படி

திராவிட குடும்பம் காத்து,

தமிழர் தம் சமூகம் காத்து

எம்மை அடைந்த

தலைவா…….

நாளை நீ இருப்பினும்,

இயற்கை உன்னை மறுப்பினும்

தமிழக அரசியல் களம் உள்ளவரை

உன் பெயரிருக்கும்.

இதை எவர் மறுக்கும்?

Leave a comment