பயணிகள் கவனிக்க…

Posts tagged ‘UPO’

உன்னை போல் ஒருவன்

அதாவது உ.போ.ஒ.படம் பற்றி நிறைய பேர் நிறைய விதமாய பேசி இருந்தாலும் இங்கே நான் சொல்லப் போவது அதன் சில சிறப்புகளை மட்டுமே!

07-rajini-kamal-200

சமீபத்திய ‘இந்தியா டுடே-தமிழ்’ இதழில் அநியாயத்துக்கு கால் பக்கம் மட்டும் உ.போ.ஒ பற்றி விமர்சனம் செய்துருந்தார்கள். படிகும் போதே அவர்களின் விமர்சன் கேனத்தனம் புரிந்தது. அதாவது அவர்களால் அவ்வளவுதான் முடியும். 58 வயசு தாத்தாகிட்ட போயி ‘போன வாரம் 18 வயசு குட்டியோட குஜாலா இருந்தியாமே?’ -ன்னு கேட்டா கடுப்பாவாரா மாட்டாரா?

தமிழ் சினிமா வரலாற்றில் பாட்டு இல்லாமல் படம் பார்த்திருக்கோம்(சிவாஜியின் ‘அந்த நாள்’ மாதிரி சில), அட டயலாக்கே இல்லாமலும் பார்த்திட்டோம்(கமலின் ‘பேசும் படம்’), ஃபைட் இல்லாமல் கூட நிறைய படங்கள் பார்த்திட்டோம், சில சமயம் கதையே இல்லாம கூட பல படங்கள் பார்த்திருக்கோம ( வயத்தெரிச்சலை கெளப்பாதீங்க தமிழ்ல பேர் பாதி அப்படித்தான்ங்கறீங்களா?), ஆனா பயங்கரவாதம் பற்றி பேசுகிற படத்தில் ரத்தமின்றி,ஆயுத சத்தமின்றி,டாய்-டூய் என்று சத்யராஜ் கத்தலின்றியும் படம் எடுக்க முடியும-னு நிரூபிக்க கமலை விட்டால் யார் இருக்கா? ( இது ரீ-மேக் தானே என்று நிறைய பே ர் சொன்னாலும், நம்பாலுக பண்ற
ரீ-மேக் படங்களை பாத்ட்டுதானே இருக்கோம். ‘போக்கிரி’ ஒரு ரீ-மேக் தான் என்பதை ஞாபகப்படுத்தனுமா?). ரீ-மேக் படம் பண்ணவும் ஒரு யோக்கியதை வேண்டுமே!