பயணிகள் கவனிக்க…

Posts tagged ‘பாடம்’

“யுவர் அட்டென்ஷன் , ப்ளீஸ்”

Stephen Covey –வை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு. அவர் ‘மேனேஜ்மென்ட் குரு’ என்று அறியப்படுபவர். இவரது பெயரை ஸ்டீபன் கோவே அல்லது ஸ்டீபன் காவே என ஒழுங்காக வாசிப்பவர்கள் ஸ்டீபன் காவாய் என வாசிப்பவர்களை விட சொர்க்கம் பெறுவார்கள்.
இவரைத் தெரிந்திராவிடில் குற்றமில்லை, இவரை விட இவரது 10/90 தத்துவம் ரொம்ப ஃபேமஸ். நமக்கு இதாங்க வேணும்.
அதென்ன 10/90 தத்துவம் ?
ஸ்கூல்ல நாம வாங்குன மார்க் மாதிரி தெரியுது.? பயப்படாதீஙக!
இது உங்களோட வாழ்வையே புரட்டும் அல்லது நீங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளும் முறையை மாற்றும்.
10/90 என்ன சொல்லுது?
நமது 10% வாழ்க்கை உங்களை சுத்தி என்ன நடக்குதோ அது !
நமது 90 % வாழ்க்கை நீங்க எப்படி நடந்துக்கறீங்களோ அது !
இதுக்கு என்ன அர்த்தம்?
நம்மை சுத்தி என்ன நடக்குதோ அந்த 10% -ஐ நாம கண்ட்ரோல் பண்ண முடியாது.
திடீர்னு வண்டி பஞ்சர் ஆவது நம்ம கைலயா இருக்கு ?
நாம காத்திருக்கையில், ட்ரெய்ன் தாமதமாக வருவதும், நம்ம ஏகப்பட்ட செட்யூலை அது கெடுத்துவிடுவதும்…. ம்ஹீம்….நம்ம கைல சுத்தமாக கிடையாது.
ஒரு நண்பருக்கு நாம் காத்திருக்க, அவர் சாலாக்கா போன் பண்ணி,”ஸாரிடா மச்சான் ! கெஸ்ட் வந்துருக்காங்க, இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்”-ன்னு சொல்லும் போது அது கடுப்பை கெளப்பினாலும் , இதாங்க அந்த 10%. இதன் மேல நம்க்கு கண்ட்ரோல் கிடையாது இல்லையா?
எப்பிடிங்க?
நீங்க ரியாக்ட் பண்ற்தன் மூலமா, சிக்னல்ல இருக்கற சிகப்பு விளக்கை ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா, அதுக்கு எப்பிடி ரியாக்ட் பண்ணனும்? அது உங்களால் முடியும்தான?
ஒரு சின்ன சிச்சுவேஷன் ;
நீங்க அலுவலகத்திற்கு கிளம்பும் அவசரத்தில் குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிடறீங்க!
உங்க பொண்ணு, டேபிள் மேல இருந்த காபியை தட்டிவிட்டு உங்க சட்டை நாஸ்தி பண்ணிட்டாங்க.
சரி.
இந்த செயலை நீங்க திருத்தி அமைக்க முடியாதுன்றது 10%

ஆனா இதுக்கு உங்க ரியாக்சன்?
‘கொஞ்சமாவது அறிவு இருக்கா?’ன்னு திட்டிட்டு,பொண்ணு கண்ணீர் விட்டு அழுவதை பாத்திட்டு,புயல் மாதிரி ட்ரெஸ்ஸிங் ரூம் போயி வேற ஷ்ர்ட் மாத்திட்டு- இன்னும் அழுதுகிட்டு இருக்கற பொண்ணை இன்னும் ஒரு வாட்டி திட்டிட்டு,ஆஹா ஸ்கூல் பஸ் போயிடுச்சா….’இந்தாங்க, எனக்கு ஆபிஸ் டைல் ஆயிடுச்சு.நீங்களே பொண்ணை ஸ்கூல்ல விட்டிடுங்க’- தலை ஆட்டிட்டு, மிச்சத்தை சாப்பிட்டு,பொண்ணை தூக்கி வண்டில போட்டுட்டு, ‘மெதுவாக செல்லவும்’ சாலைல எல்லாம் மத்த வண்டிகள், பாத சாரிகள், ட்ராஃபிக் ஜாம்…மதிக்காம உள்ள பூந்து, வெளிய வந்து ……..கடைசியில் நம்ம ஆபிசுக்கு அரை மணி தாமதம்.
‘இன்னிக்கு மீட்டிங்னு சொல்லியும் லேட்டான்னு’கடுப்பாய் பார்க்கும் பாஸ்’
சாயங்காலம் வீடு வந்தால், மனைவியும், பொண்ணும் நம்மைப் பார்க்கும் பார்வையில் ( அடப் பாவி! அவனா, நீ ?) வித்தியாசத்தை நம்மால் எளிதில் உணர முடியும்.
இது ஏன்?
காலையில் நடந்த ‘அந்த’ நிகழ்ச்சி !/
1. காபியால் வந்த வினையா?
2. நம் பெண்ணால்தான் ந்டந்ததா?
3. உங்களால் நடந்ததா?
விடை எண். 3. காபி கொட்டிய வரை அதன் மீது நமக்கு எந்த கண்ட்ரோலும் கிடையாது. ஆனால் அதுக்கு நீங்க காட்டுன ரீயாக்ஷன் தான் உங்க ஒரு நாளையே கெடுத்துடுச்சு.
இதே ஸீன் வேற…வேற …வேற மாதிரி நடந்திருந்தா? காபி கொட்டிருச்சி. உங்க பொண்ணு அழறா, நீங்க, “ சரிப்பா, பரவால்ல. விடு. இதுக்கு எதுக்கு அழற? அடுத்த தடவ இப்பிடி கேர்லெஸ்ஸா இருக்காது” அப்பிடின்ன்ட்டு, உங்க ரூமுக்கு போயி சட்டையை மாத்திட்டு, கீழ் வந்து உங்க பொண்ணு ஸ்கூல் பஸ் ஏறிப் போறதப் பாக்கறீங்க. 5 நிமிஷம் முன்னாடியே ஆபிஸ் மீட்டிங் வந்த்துக்கு , உங்க பாஸ் ஒரு சந்தோசப் புன்னகை தர்றாரு.
இது எப்பிடி இருக்கு? ஒரே நிகழ்வு! இரண்டு முடிவு!
நீங்க ரியாக்ட் பண்ண விதத்தால் இரண்டு வேறு மாதிரியான முடிவு.
யால் நடந்ததா?
ஃபிளைட் டைம் மாறிடுச்சு! யாரை திட்ட்டலாம்னு யோசிக்கவேணாம். அந்த டயத்துல , புத்தகம் படிங்க. கூட வற பயணிகளை தெரிஞ்சுக்கோங்க. ஏன் டென்சன் ?
தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் இப்படிப்பட்ட அவசர, ஆத்திர முடிவுகளால், மன அழுத்தம், தலைவலி, இதய வலி யால் அவதிப்படுவத்ஹ்கச் சொல்லப்படுகிறது.
நீங்கள் அவர்களில் ஒருவரா, 10/90 புரிந்துகொண்டவரா?