பயணிகள் கவனிக்க…

Posts tagged ‘பக்தி’

எத்தனையோ பண்ணிட்டோம்….


நம் அனைவருக்கும் வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அது சுலபமாக நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.தவறில்லைதான். ஆனால் சும்மா எதுவுமே கிடைத்து விடாது அல்லவா? இதற்காக பெரிய தியாகம் எதையும் செய்யவேண்டியதில்லை. மிகச் சிறிய விஷயங்களில் கவனமாக இருந்ததால் போதும்.

  1. 1. வாரத்தில் ஒரு நாளை உங்கள் ‘முன்னேற்ற நாள்’ என்று குறித்துக் கொள்ளுங்கள்.
  2. 2. அன்றைய தினம் படுக்கையில் இருந்து எழும்போதே, ‘இந்த நாள் என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள் – இன்று எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கப்போகிறேன்’ என்று முடிவுசெய்யுங்கள்.
  3. 3. அலுவலகமோ, கல்லூரியோ சிரித்த முகத்தோடு அனைவருக்கும் வணக்கம் சொல்லி, அன்றைய தினத்தின் வேலைகள் அனைத்தையும் எழுதி வைத்துக் கொண்டு, ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டே வாருங்கள்.
  4. 4. அனைவரிடமும் அமைதியாகப் பேசுங்கள்; முதல் நாளின் பணிகள் ஏதேனும் முடிக்கப்படாமல் இருந்தால் அதனை உடனடியாக செய்து முடியுங்கள்.
  5. 5. வாடிக்கையாளரிடம் பேசும்போது தவறான உறுதிமொழி எதுவும் கொடுக்காமல், பொருளின் தரம்-அதன் முக்கியத்துவம் பற்றிப் பேசுங்கள்.
  6. 6. நீங்கள் இருக்கும் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கக்கூடிய எதையும், செய்யாதீர்கள் -சொல்லாதீர்கள்.
  7. 7. அடுத்தவர்களின் தவறுகளை மிக மென்மையாக சுட்டிக்காட்டுங்கள் – உங்கள் தவறுகள் சுட்டப்படும்பொழுது பொறுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள், திருத்திக்கொள்ள முயலுங்கள்.
  8. 8. வீட்டிற்கு கிளம்பும்பொழுது அனைவரிடமும் விடைபெற்றுக்கொள்ளுங்கள். ஏதேனும் பணி (உங்களுடைய/சக ஊழியருடைய) முடிக்கப்படாமல் உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
  9. 9. வீட்டிற்குள் நுழையும்போதே உங்களால் ஒரு வித்தியாசத்தை உணரமுடியும்; அதை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  10. 10. இரவு தூங்கும்முன் அன்றையதினம் நடந்தவைகள் அனைத்தையும் ஞாபகப்படுத்திப் பாருங்கள்; உங்களுக்கு நீங்களே மதிப்பெண் இட்டுகொண்டு சொல்லுங்கள்; ’நான் இன்று மகிழ்ச்சியாக இருந்தேன்-திறமையாக பணிகளை முடித்தேன்-என்னுள் உள்ள தவறுகளை திருத்தி என் திறமைகளை மேலும் வளர்த்திக் கொள்வேன்..இதோ என் வெற்றிப் பயணம் துவங்கிவிட்டது’

முதலில் இது சற்றுகடினமாகத்தான் இருக்கும். ஆனால் பெரிய வெற்றிக்கான ஒரு சிறிய ஆரம்பம் இது என்பதனை மறக்காதீர்கள். ‘எத்தனையோ பண்ணிட்டோம் இதப் பண்ணமாட்டமா’ என்றுதானே நினைக்கிறீர்கள்? சரியான ஆள் நீங்கள்தான்!

வாரத்தில் ஒரு நாள் மட்டும் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்; அது உங்கள் வாழ்க்கை முறையையே மாற்றிவிடும்.

வாழ்த்துகள்.