பயணிகள் கவனிக்க…

Posts tagged ‘சாமியார்’

” கதவைத் திற ; காமம் வரட்டும் “

ஸ்வாமி நித்யானந்தம்(ன்?) அவர்கள் பற்றிய சமீபத்திய வீடியோ வெளியீடுகள், செய்திகள் ரசிக்கும்படியாய் இல்லை என்பது தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த விஷயம். ( என் நண்பர் சுந்தர் திருப்பூரிலிருந்து : ‘என்னப்பா இது? ‘கதவைத் திற-காற்று வரட்டும்’-னு நமக்கெல்லாம் சொல்லிட்டு இவுரு கதவை சார்த்திக்கிட்டாரு?’….என்னா ஒரு நக்கல் கேள்வி? யோவ் நித்தி! இதெல்லாம் தேவையா?)
நடப்பு நிகழ்வுகள் நம்மை மட்டுமல்ல, ஒவ்வொரு முழுமையான ஹிந்துவையும், தமிழனையும் சில கேள்விகளுக்குள் தள்ளியிருப்பது நிதர்சனம். ஒரு நிமிடம் இதயம் நின்று துடிக்குமளவிற்கு அந்த வீடியோ பதிவுகள் இருப்பதும், கோவிலின் கற்பக் கிரகத்திற்குள்ளேயே நட்ந்த ‘அந்த’ நிகழ்ச்சியை விட இது அதிர்ச்சியை அலை பாய விட்டிருபதும் உண்மையோ உண்மை. தமிழகமே இப்படி அடுத்தடுத்த ஆன்மீகத் தாக்குதல்களால் நிலைகுலைந்து கிடக்க, இதில் ‘ஸ்வாமி நித்யா’’பாவம் சின்னப் பையன்தானே?போனா போட்டும்’ங்கர ரீதியில் சில அசமஞ்சங்கள் பதிவிட்டிருப்பதும் கூட நடந்திருக்கிறது.
பார்க்க : http://satamilselvan.blogspot.com/2010/03/blog-post_03.html
கேனத்தனமான் இந்த லிங்க் ப்ளாக்கை படிக்கும் முன் இதை முடித்து விடுவோமா?

‘கதவை திற; காற்று வரட்டும்‘ என்று சொன்ன ஸ்வாமிஜி, ‘கதவை திற; ரஞ்சிதா வரட்டும்‘ என்று ஏன் சொன்னார், என்பது மாதிரியான கேள்விகளுக்குள் நாம் போகத் தேவையில்லை. அதைக் கவனிக்க வேறு டிபார்ட்மெண்ட் இருக்கிறது. சினிமாக்காரர்களாகிய நாங்கள் வெகு யோக்கிய சிகாமணிகள் என்று கொஞ்ச நாட்களுக்கு முன் மீட்டிங் போட்டு சொன்னவர்கள் இப்போ எங்கே என்றும் தேட வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை. நடிகை புவனேஷ்வரி விபச்சார வழ்க்கில் கைது செய்யப்பட்ட போது ‘அய்யகோ, நாங்களா? எங்களையா?’ என அடித்து கொண்ட ‘தமிழ் சினிமாவின் பகல்நேரத்து பத்தினிகள்’ இப்போது என்ன சொல்வார்கள் என நாம் கவலைப் படவும் வேண்டியதில்லை.
காண்க – லிங்க். (http://whatslatest.com/blog/?p=11264)
நமது கருத்து ; கரகாட்டக்காரன் கவுண்டர் சொல்வது போல் யாரை, யாரு வச்சிருக்கா? என்று பார்ப்பது நம் வேலையில்லை.
1.நீங்க யாரை வேணும்னாலும் வச்சிக்குங்க. அதும் சினிமா நடிகைன்னா அது உங்களை மாதிரி வி.ஐ.பி.களுக்கு பொதுச் சொத்து. பொதுவுடைமையாக்கப்பட்ட மாதிரி. ஆனா வீட்டுக்குள்ள வச்சிக்கங்க! வண்ணத்திரைக்கு வர அளவுக்கு வாணாம்.
2. ‘அந்த’ ஆசை வந்திருச்சா…ஓ.கே. வசதியும் கெடச்சிருச்சா..ஓ.கே. அனுபவி.! ஆனா மறுபடியும் டி.வி.யில வந்து ‘கதவைத் திற-ஜன்னலை சாத்து’-ன்னு ஏதும் வேதம் ஓதுன….புத்தகம் எழுதுன ….மவனே செறுப்பு பிஞ்சிடும், பார்த்துக்க!
3. ‘உன் ஆசிரமத்தில என்ன கருமம் நடந்துதுன்னு எங்களுக்கு எந்தவித அக்கறையும் இல்லை. ஆனா உங்களை நம்பிக்கிட்டு இருக்கிற மனித ஜென்மங்களை ஒரு நிமிஷம் நினைச்சுப் பாருங்க ! உங்க கால்ல விழுந்து வி.ஐ.பி.க்கலை நினைச்சு பாருங்க! நீங்கதான் கதின்னு உங்ககிட்ட தங்கள் குடும்ப விஷயம் பேசின பாவப்பட்ட துகளை நினச்சுப் பாருங்க !
அப்படியே கொஞ்சம் கீழே படிச்சுப் பாருங்க !
நித்யானந்த சாமியாரை நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான பக்தர்களில்
நானும் ஒருத்தி என்று புலம்பியுள்ளார் நடிகை தாரா.

கன்னடத்தில் முன்னணி நடிகை கம் அரசியல்வாதி இந்த தாரா.
தமிழில் இங்கேயும் ஒரு கங்கை, நாயகன் என சில படங்களில் நடித்தவர்.

நித்யானந்தரின் மிகத் தீவிரமான பக்தை இந்த தாரா. நித்யானந்தமே பக்தர்களுக்கு ‘நித்திய ஆனந்தம்’ என்றும், கடவுள் அவதாரம் என்றெல்லாம் வெளிப்படையாக ஆதரவு அளித்தவர் தாரா. தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் நித்யானந்தனின் பெங்களூர் பிடாதி ஆசிரமத்துக்குப் போய் நாள் முழுக்க அங்கே சேவைகள் செய்வது தாராவின் வழக்கம்.

இந்த நிலையில் நித்யானந்தன் – ரஞ்சிதா பலான டிவிடி சன் செய்திகளில் ஒளிபரப்பாகி, நாடு முழுவதும் கொதிப்பைக் கிளப்ப, அதிர்ந்து போய்விட்டாராம் தாரா.

இன்று தாராவின் பிறந்த நாள்! (05.03.2010 என்னா ஒரு ஜெனெரல் நாலெட்ஜ்?)

ஆசிரமத்துக்குப் போவீர்களா என அவர் முன் மைக்கை டிவிக்காரர்கள் நீட்டியதுதான் தாமதம். கண்ணீரும் கோபமுமாக பொறிந்து தள்ளினாராம் தாரா.

“என்ன விளையாடறீங்களா.. மனுசன் போவானா இனிமே அந்த ஆசிரமத்துக்குள்ள. ச்சே.. நான் எவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தேன். என்னை மாதிரி எத்தனை லட்சம் பக்தர்கள் தெரியுமா அந்த ஆளுக்கு (!). இப்படி ஒரு அசிங்கம் நடந்த இடத்துல இனி நான் கால் வைப்பேனா?

இந்த லட்சணத்தில் அந்த ஆபாச காட்சியில் வந்த நபர் சுவாமி நித்யானந்தாவே அல்ல என்று நித்தியானந்தா தியான பீட பி.ஆர்.ஓ. நித்ய ஆத்ம பிரமானந்தா கூறியுள்ளார் அந்த உண்மையை சுவாமியே தெரிவிப்பார் என்றும்……?
.

இதையடுத்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். ஆனால் அவற்றுக்கு பிரமானந்தா பதிலளிக்கவில்லை.

இந்த பக்தர்களை ஏமாற்ற எப்படி நித்யானந்தனுக்கு மனசு வந்தது. இனி மனித உருவில் சாமிகள் என்று சொல்லும் யாரையும் நம்பக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

நம்ம தமிழ் நாட்டு மக்களுக்கு………….சரி வேணாம். அது நம்க்கெதுக்கு ? இந்த மாதிரி கருத்து சொல்லப் போயித்தான் நடிகர் விவேக்கிற்கு ஏகவசனத்தில் பட்டப் பெயர் வைத்திருக்கிறது ஒரு தினசரி.

தேவையாப்பூ ?